Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வியாழக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தல் உடுமலையில் தொடங்கியது. இதையடுத்து, தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையர்கள் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் அலெக்சாண்டர், நீலகிரி மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் புத்திச்சந்திரன் ஆகியோரிடம் அதிமுக நிர்வாகிகள்
வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். மேலும், தமிழ்நாடு கேபிள் டிவி வாரியத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சண்முகவேலு ஆகியோர் உள்பட 6 பேர் இதுவரை மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.  மாவட்ட அவைத் தலைவர், துணைச் செயலாளர், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 50-க்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

0 comments: