Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    




திருப்பூர், : திருப்பூர் அடுத்துள்ள 63 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (29). கட்டிடத் தொழிலாளி, இவரது மனைவி பூங்கொடி. அதே பகுதியில் உள்ள தறி குடோனில் வேலை பார்க்கிறார். இவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் இவர்களது குழந்தை சிவராமகிருஷ்ணன் (2) தினேஷ்குமாரின் தாயார் கலைவாணியின் பராமரிப்பில் இருந்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வீட்டருகே கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு சென்றுள்ளான்.அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்துள்ளான். குழந்தையை காணாது பதறிய பாட்டி கலைவாணி மற்றும் அக்கம், பக்கம் தேடியுள்ளார். அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு சென்று பார்த்தபோது, குழந்தை தண்ணீரில் மூழ்கியபடி கிடந்தான். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு, பூமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் சடலத்தைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: