Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    






கோத்தகிரி:  கோடை சீசனையொட்டி, ஆண்டு தோறும் தோட்டக்கலைதுறை சார்பில் ஊட்டியில் மலர்கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு துவக்க நிகழ்ச்சியாக 8வது காய்கறி கண்காட்சி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நேரு பூங்காவில் நேற்று காலை துவங்கியது. கண்காட்சியில் கோவை, மதுரை, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி  உள்ளிட்ட பல மாவட்ட தோட்டக்கலை துறையின் சார்பிலும், தனியார் சார்பிலும் மொத்தம் 21 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட தோட்டக்கலை சார்பில் பூசணி, முள்ளங்கி, கேரட் ஆகியவற்றைக்கொண்டு திருமலைநாயக்கர் மஹால், கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் 40 கிலோ சேனை கிழங்கால் டிராகன், நெல்லை மாவட்டம் சார்பில் 50 கிலோ வெள்ளை பூசணியால் மயில் உருவம் அமைத்து உள்ளனர். 

இதே போல பாகற்காயால் முதலை, 10 கிலோ பச்சை மிளகாயால் சேவல் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் சார்பில் 75 கிலோ முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் வாழை மரங்களால் பாரதமாதா உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 450 கிலோ பலவண்ண குடைமிளகாய்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர் கண்காட்சியில் தனிஇடம் பிடித்துள்ளது.  கண்காட்சியை காண காலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பல்வேறு வகையான காய்கறி அலங்காரங்களை பார்த்து வியந்தனர்.

0 comments: