Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    




திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின்  கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா பேசினார்.
 திருப்பூர் மாநகர திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வெள்ளியங்காடு நான்கு சாலை சந்திப்பில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு, மாநகர துணைச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். இதில்,  திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ், எல்.பி.எப். மாநில துணைத் தலைவர் கோவிந்தசாமி, மாநகரச் செயலாளர் டி.கே.டி. நாகராஜ்,  பொருளாளர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் நந்தகோபால் வரவேற்றார்.
  இதில், ஆ.ராசா பேசியது:  கடந்த திமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூ. 75 ஆயிரம் கோடி.  ஆனால் தற்போதைய அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூ. 2 லட்சம் கோடியாக உள்ளது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் என அனைத்து துறை ஊழியர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் மத்தியில் ஆளும் பாஜக அரசும், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கும் நோக்கில் செயல்படுகிறது. நிலம் கையகச் சட்டம் என்பது பொதுத்துறை நிறுவனங்களுக்காக கொண்டு வரப்பட்டது. தற்போது அந்தச் சட்டத்தை தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக  கொண்டு வர மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. வரும் சட்டப் பேரவைத் தேர்தல் மூலமாக திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.

0 comments: