Monday, July 20, 2015

On Monday, July 20, 2015 by Unknown in ,    
ராஜபாளையத்தில் 2018 பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்கள்: கோபால்சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்
ராஜபாளையத்தில் 2018 பேருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை கோபால் சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்.
தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம் நகராட்சி பகுதியான வார்டு எண் 29, 30 ஆகிய பகுதிகளில் 2018 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவைகளை கோபால்சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது:–
தமிழ்நாடு முதல்–அமைச்சர் அம்மா நெசவாளர் பெருமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறார். அம்மாவின் அரசு நெசாவளர்களுக்கு ஓய்வூதியம், பெடல் தறி, கூலி உயர்வு ஆகிய உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆகவே வருகிற சட்டமன்ற தேர்தலில் நெசவாளர்கள் அம்மாவின் அரசுக்கு பேராதரவு தருமாறு வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் தனலட்சுமி செல்வ சுப்பிரமணியராஜா, நகர செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

0 comments: