Sunday, July 05, 2015
On Sunday, July 05, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.2.42 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் .பூனாட்சி வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு சமுதாய முதலீட்டு நிதிäஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு ஊக்கநிதி ஒத்த தொழில் குழுக்களுக்கு உள்கட்டமைப்பு நிதி வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ;.பழனிசாமி தலைமையில் இன்று (05.07.2015) நடைபெற்றது.
இவ்விழாவில் 45 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ. 180 இலட்சமும் 45 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு ஊக்கநிதியாக ரூ. 45 இலட்சம் மற்றும் 17 ஒத்த தொழில் குழுக்களுக்கு உள்கட்டமைப்பு நிதியாக ரூ. 17 இலட்சம் என மொத்தம் ரூ. 242 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் பூனாட்சி அவர்கள் பேசியதாவது :
தமிழக முதலமைச்சர் அவர்களால் கடந்த 1993ம் ஆண்டு மகளிர் திட்டம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அம்மா அவர்கள் பெண்களுக்கென தொட்டில் குழுந்தைகள் திட்டம் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்ää அனைத்து மகளிர் காவல்நிலையம் மகளிர் அதிரடிப்படைää திருமண நிதியுதவியுடன் தாலிக்குத்தங்கம்ää விலையில்லா மின்விசிறி மிக்சி கிரைண்டர் மற்றும் கறவை பசுக்கள் வெள்ளாடுகள் என எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்மூலம் வறுமையை ஒழித்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் இன்றைய தேதி வரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 238 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 1 இலட்சம் வீதம் ரூ.2.38 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் 10 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 1இலட்சம் வீதம் ரூ. 10 இலட்சம் வழங்கப்படுகிறது. கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.242 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தனது தலைமையுரையில் தெரிவித்ததாவது :
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் 14 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக 9 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த ஏழை மற்றும் மிகவும் ஏழை மக்களைக் கொண்டு 273 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக 134 ஊராட்சிகளில் 131 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் அமைக்கப்பட்டு இதுவரை மொத்தம் 404 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.
4 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்ட 135 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு தலா ரூ. 4 இலட்சம் வீதம் ரூ. 540 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 1142 மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ரூ. 99.2 இலட்சமும்ää 1095 நலிவுற்றவர்களுக்கு ரூ. 92.17 இலட்சமும் சைக்கிள் கடைää பெட்டிக்கடை பூ வியாபாரம் காய்கறி வியாபாரம் மற்றும் வயர்சேர் பின்னுதல் போன்ற தொழில்களுக்கு வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் கட்டமாக ஐந்து வட்டாரங்களில் அமைக்கப்பட்ட 138 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களில் இதுவரை 128 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு தலா ரூ.50000ம் வீதம் ரூ.60 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியம் வாரியாக இதுவரை நடத்தப்பட்ட நான்கு முகாம்களில் 701 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் 695 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின்கீழ் 2785 இளைஞர்களுக்கு ரூ. 172.91 இலட்சம் மதிப்பில் கணினிää அழகுக்கலை இலகுரக வாகனம் ஓட்டுநர் எலக்ட்ரீசியன் பிளம்பர்ää பிட்டர்ää கொத்தனார் போன்ற பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக பயிற்சி உதவித்தொகையுடன் வழங்கப்பட்டுää பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்பட்டுள்ளது. 2015-16ம் ஆண்டிற்கு 1560 இளைஞர்களுக்கு பல்வேறு தொழில்பயிற்சிகள் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் அவர்களால் புதிததாக அறிவிக்கப்பட்ட மகளிரை குடும்பத்தலைவராகக் கொண்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சிறப்பு வாழ்வாதாரம் அளிக்கும் திட்டத்தின்கீழ் ஊரக பகுதிகளைச் சார்ந்த ஏழை மகளிரை குடும்பத்தலைவராகக் கொண்ட 1540 நபர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதல்கட்டமாக ஒரு வட்டாரத்திற்கு 20 நபர்கள் வீதம் 14 வட்டாரத்திற்கும் 280 நபர்களுக்கும் மாநகராட்சி பகுதியைச் சார்ந்த 800 நபர்களுக்கும் நகராட்சி பகுதியைச் சார்ந்த 110 நபர்களுக்கும் மற்றும் பேரூராட்சி பகுதியைச் சார்ந்த 200 நபர்களுக்கும் என மொத்தம் 1110 மகளிர் குடும்பத்தலைவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
இவ்விழாவில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் கடனுதவிகள் வழங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்தியன் வங்கி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றிற்கு நினைவு பரிசும் மற்றும் விருதுகளை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக் கொறடா .மனோகரன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் .ரத்தினவேல குமார் மாநகராட்சி மேயர் ஜெயா சட்டமன்ற உறுப்பினர்கள் .சிவபதி பரஞ்ஜோதி சந்திரசேகர் இந்திராகாந்தி வளர்மதி துணை மேயர் சீனிவாசன் மாவட்ட ஊராட்சித்தலைவர்.ராஜாத்தி மண்டலக்குழுத்தலைவர்கள் .ஞானசேகரன் மனோகரன் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராமு மாமனன்ற உறுப்பினர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மகளிர் திட்ட அலுவலர் கோமகன் வரவேற்புரையாற்றினார். முடிவில் உதவி திட்ட அலுவலர் காமராஜ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், திருப்பூர் வாலிபாளையம், கே.பி.என்., காலணி, முள்ளுக்காடு பகுதிகளில் எம்.ஜி.ஆர் பிறந...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11. 06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
Thousands of Staff and students of NIT-T paid rich floral tributes to the former president of India, Dr. APJ Abdul Kalam at a program organ...
-
திருச்சி மார்ச் 24 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ...
0 comments:
Post a Comment