Monday, July 20, 2015

On Monday, July 20, 2015 by Unknown in ,    
திருச்சுழி தெற்கு ஒன்றிய திமுக தேர்தல் நிதி வசூல் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை எம்.ரெட்டியபட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர் முகமதுஜான் தலைமை வகித்தார். திருச்சுழி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்னுதம்பி வரவேற்றார். வடக்கு மாவட்ட திமுக செயலர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., தேர்தல் நிதியை பெற்றுக்கொண்டு பேசினார். கூட்டத்தில் விருதுநகர் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜயபாண்டி, மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, விருதுநகர் வடக்கு மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: