Tuesday, August 25, 2015

On Tuesday, August 25, 2015 by Unknown in ,    
Image result for அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
சாத்தூர் ஒன்றியத்தில் 2–ம் கட்டமாக மக்கள் குறை கேட்கும் முகாம் 8 ஊராட்சிகளில் நடைபெற்றது. பெரிய கொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்டி, சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையால், நடுஞ்சூரங்குடி உட்பட 8 ஊராட்சிகளில் இந்த முகாம் நடைபெற்றது. முகாமில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனு வாங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:–
தொகுதியில் ஒவ்வொருவரின் கோரிக்கைகளையும் தீர்த்து வைக்கும் வகையில் இந்த முகாம் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே சாத்தூர் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் இந்த முகாம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது 2–ம் கட்டமாக இந்த முகாம் நடைபெற்று வருகின்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். தமிழக முதல்வரின் சரித்திர சாதனை திட்டங்கள்தான், தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை பெற்று தந்தது.
குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் சரித்திர வெற்றியை பெற்றுள்ளார். தமிழக மக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வருகின்றனர். அண்ணா காலத்தில் அண்ணன் தம்பி உறவு கட்சியினர் மத்தியில் நிலவியது. தற்போது தமிழக முதல்வர் அம்மா ஆட்சி காலத்தில் தெய்வம்–பக்தர்கள் கொண்ட உறவாக அ.தி.மு.க. திகழ்கின்றது. ஐந்தரை கோடி மக்கள் தெய்வமாக வணங்கும் தமிழர் குல சாமியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா காட்சியளிக்கின்றார்.
இன்று முகவரி இல்லாத, அரசியலில் அநாதையாக்கப்பட்ட இளங்கோவன் தமிழக முதல்வரை தரம் தாழ்ந்து பேசியதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சரித்திர சாதனைகளை படைத்து வரும் தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
யூனியன் தலைவர் வேலாயுதம், நகராட்சி தலைவர் டெய்சிராணி, ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, மாணவரணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் வாசன், வக்கீல் பாஸ்கரன், தொகுதி செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் முனிஸ், வெம்பக்கோட்டை இளைஞரணி ஒன்றிய செயலாளர் காசித்துரைப் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

0 comments: