Saturday, September 19, 2015

On Saturday, September 19, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
விநாயகர் சிலைகள் வைக்கும் இடத்தில் ஓலை கூரைகள் அமைக்க கூடாது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை மட்டுமே அமைக்க வேண்டும் என்று போலீசார் கூறி வந்தனர். அதற்கு போதிய கால அவகாசம் இல்லை. ஆகையால் அடுத்த ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பதாக இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதியம் முள்ளக்காடு ராஜீவ்நகரில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்காமல் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் இந்து முன்னணி மண்டல பொதுச்செயலாளர் அருள்ராஜ் மற்றும் அந்த பகுதி இந்து முன்னணி நிர்வாகிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர்கள் சங்கர், மாரியப்பன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ராகவேந்திரா, மண்டலத்தலைவர் மாதவன், ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு போலீசார் அழைத்து சென்ற நிர்வாகிகளை விடுவித்தனர்.
இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலர்கள் புகாரின் பேரில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக முத்தையாபுரம் போலீசார் இந்து முன்னணியினர் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

0 comments: