Monday, October 12, 2015

On Monday, October 12, 2015 by Unknown in , ,    


      தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10.10.2015 நடைபெற்ற உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் 320  நபர்களுக்கு திருமணம், கல்வி விபத்து இறப்பு, இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் ஒய்வூதியம் போன்ற திட்டத்தின் கீழ் ரூ.43 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கி பேசியதாவது:
      மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார்.  தமிழ்நாட்டில் உள்ள உழவர் பெருமக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் உழவர் பாதுகாப்புத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் திருமணம், கல்வி போன்ற திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்து மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளார்கள். அரசின் நலத்திட்டங்களை பெறுகின்ற மக்கள் என்றும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
     இவ்விழாவில் மாண்புமிகு மேயர் திருமதி.அ.பா.ரா.அந்தோணி கிரேஸ்,  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.முருகையா,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் திரு.மோகன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செழியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: