Wednesday, November 11, 2015

On Wednesday, November 11, 2015 by Unknown in , ,    


தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு ஊராட்சி புனித அந்தொனியார் மேல்நிலைப்பள்ளி 07.11.2015 சுகாதாரத்துறை மூலம் நடைபெற்ற மிஷன் இந்திர தனுஷ் சிறப்பு தடுப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார் இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து கூறியதாவது.  
மிஷன் இந்திரதனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் 4 சுற்றுக்களாக அக்டோபர்இ நவம்பர்இ டிசம்பர் 2015 மற்றும் ஜனவரி 2016 வரை தொடர்ந்து 4 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்  தவிர மற்ற வார நாட்களில் நடைபெறுகிறது. அக்டோபர் மாத முதல் சுற்றில் தூத்துக்குடி மாவட்டத்தில் 6580 குழந்தைகளுக்கும், 394 கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம்; சுற்று நவம்பர்  7ம் தேதி முதல் 16ம் தேதி வரை  நடைபெற உள்ளது.
    தமிழ்நாட்டில் 2 வயதிற்குட்பட்ட தடுப்பூசி போடாமல் விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்குமான சிறப்பு இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து வழங்கும் முகாம் 2015 அக்டோபர் 7ம் தேதி முதல்; ஜனவரி 2016 வரை 2ம் கட்டமாக 16 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள,;  5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 253 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பிரத்யேகமாக தடுப்பூசி மையம் நிறுவப்பட்டு கிராம சுகாதார செவிலியர், நகர்ப்புற சுகாதார செவிலியாகள்  மூலம் தடுப்பூசி வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி மையம் காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை செயல்படும். கர்ப்பிணிகளுக்கும் மற்றும் 2 வயது வரை தடுப்பூசி விடுபட்ட குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் தடுப்பு மருந்து கொடுப்பது அவசியம். நடமாடும் தடுப்பூசி வழங்கும் மருத்துவ குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர்
 டிசம்பர்;2015 மற்றும் ஜனவரி 2016 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற வாரநாட்களில் சத்துணவு மையங்கள் , துணை சுகாதார நிலையங்களில் நடைபெறும் மிஷன் இந்திரதனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாமில்;  கர்ப்பிணித் தாய்மார்களும், 2வயதுக்குட்பட்ட குழந்தைகளும்  கலந்து கொண்டு பயன்பெறுமாறு கூறினார்
.இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் திருமதி.அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், துணை இயக்குநர் (சுகாதாரப்ணிகள்) மரு.ச..உமா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 comments: