Wednesday, November 11, 2015

On Wednesday, November 11, 2015 by Unknown in , ,    



ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின்  450வது புதிய கிளை நிறுவன தின நாளான இன்று திறக்கப்பட்டது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 450வது புதிய கிளை மற்றும் 950வது ஏடிஎம் மையம் ஸ்ரீவைகுண்டத்தில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் உபேந்திரகாமத் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் தேர்வுநிலை நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.பி.அருணாசலம் புதிய கிளையை திறந்து வைத்தார்.

திருமதி. அருந்தபசு குத்துவிளக்கேற்றினார். தொழிலதிபர் ஆண்டிநாடார் பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து வைத்தார். கணினி சேவையை டாக்டர் பி.எம்.எஸ்.ஆஷிக் ஷமீம் தொடங்கி வைத்தார். நிலக்கிழார் கோட்டை கைலாசம் புதிய 950லிவது ஏடிஎம் சேவையை திறந்து வைத்தார். திருமதி. கே.ஜெயபாலா ஏடிஎம் மையத்தில் குத்துவிளக்கேற்றினார். முதல் ஏ.டி.எம். கார்டை தொழிலதிபர் குமார் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வங்கியின் இயக்குநர்கள் மகேந்திரவேல், அரவிந்த்குமார், சிதம்பரநாதன், பொதுமேலாளர்கள் குணசேகரன், தேவதாஸ், கந்தவேலு, ரவீந்திரன், துணைப் பொதுமேலாளர் அன்பழகன், உதவிப் பொதுமேலாளர் சூரியராஜ், தூத்துக்குடி மண்டல மேலாளர் கணேசன் உட்பட வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கிளை மேலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.

0 comments: