Wednesday, December 02, 2015

On Wednesday, December 02, 2015 by Unknown in , ,    


தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு  பகுதிகளில் இருக்கும் 21 பள்ளிகளைச் சார்ந்த 1098 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி கல்வித்துறையின் சார்பில் விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாட குறிப்பேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்               எம்.ரவி குமார்,  தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.

மேலும், பல்வேறு பகுதிகளைச் சார்ந்த குடிசை வீடுகளை இழந்த 412 நபர்களுக்கு ரூ13.93 இலட்சம் நிவாரண நிதியுதவியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கினார். வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விடுகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை 452 குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.19.79 இலட்சம் நேற்று வரை வழங்கப்பட்டுள்ளது. இன்று (2.12.2015) பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பாதியளவு வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.4100/- வீதம் 303 நபர்களுக்கும், முழுமையாக விடுகளை இழந்தவர்களுக்கு ரூ.5000/- வீதம் 111 நபர்களுக்கும் மொத்தம் ரூ.13.93 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இதுவரை குடிசை வீடுகளை இழந்த 865 நபர்களுக்கு ரூ.33.79 இலட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளின் போது மாண்புமிகு மேயர் திருமதி.அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.இராமகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன், வட்டாட்சியர் திரு.சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: