Thursday, December 03, 2015

On Thursday, December 03, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 60மிமீ மழை பெய்துள்ளது

இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): கோவில்பட்டி 56, விளாத்திகுளம் 47, குலசேகரன்பட்டினம் 45, காடல்குடி 34, காயல்பட்டினம் 25, திருச்செந்தூர் 23, சூரங்குடி 23, கழுகுமலை 23, தூத்துக்குடி 14, என மாவட்டத்தில் மொத்தம் 396 மிமீ மழை பெய்துள்ளது. 

தற்போது பெய்த பலத்த மழையால் கோவில்பட்டி பகுதிகளில் விளை நிலத்துக்குள் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்தன. கழுகுமலை அருகே கரடிகுளத்தில் மானாவாரி பயிர்கள் சேதமடைந்துள்ளன. இப்பகுதியில் 4 விவசாயிகளுக்குச் சொந்தமான 2.16 ஹெக்டரில் பயிரிடப்பட்டிருந்த பாசி, உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கின.

கடம்பூர் அருகே குருமலை பகுதியில் ராஜன்குளம் கண்மாய் தென்புறம் கரை உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதன் அருகேயுள்ள புஞ்சை மற்றும் நஞ்சை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. அரசங்குளம் அயன்குளம் கண்மாய் அருகேயுள்ள 7 விவசாயிகளுக்குச் சொந்தமான 4.50 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களும் சேதமடைந்துள்ளன.

0 comments: