Monday, December 07, 2015
தூத்துக்குடியில் மோட்டார் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து பைக் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி பகுதியில் வீட்டின் முன்பு மற்றும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்கள். மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஷ் உத்தரவுப்படி போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் தூத்துக்குடி நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தார்கள்.
அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்கள். இதையடுத்து 2 பேரையும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பூபாலராயர்புரத்தை சேர்ந்த அசோக் என்பவருடைய மகன் மரிய அந்தோணி பூபஸ்டன் (19) மற்றும் எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் தெருவை சேர்ந்த டேனியல் ராஜா மகன் ஜேக்கப் ராஜா (19) என்பதும் தெரியவந்தது.
அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் பூபாலராயபுரத்தை சேர்ந்த ராயப்பன் விஜய் என்பவருடைய வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி வடபாகம் போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் மீட்டனர். இவர்கள் வேறு எங்கெல்லாம் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு உள்ளார்கள் என்று போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment