Monday, December 07, 2015

On Monday, December 07, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக‌ளை ஆய்வு செய்து, உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அளிக்க‌ தேமுதிக தலைவர் விஜய‌காந்த் இன்று தூத்துக்குடி வந்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க நகரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆறுமுகநயினார் தலைமையில் நிவாரண உதவிகளை தேமுதிக தலைவர் விஜகாந்த் வழங்கினார். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து குறிஞ்சிநகர், முத்தையாபுரம், முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், வெள்ள நிவாரணப்பணிகளில் அரசியாக்கக்கூடாது. கடந்த அக்டோபர் மாதத்திலே மத்திய அரசு, மழை வெள்ளம் வருவது குறித்து எச்சரிக்கை செய்தது. மாநில அரசு அதனை உதாசீனப்படுத்தியது. தூத்துக்குடியில் மழை வெள்ளத்த்திற்கு காரணம் உப்பாற்று ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான். வைகுண்டராஜன் போன்ற பெரிய மனிதர்கள் அந்த ஓடையை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். அதிமுக - திமுகவினர் ராஜா வீட்டு கன்றுகுட்டி போல உலா வருகின்றனர். அவர்கள் உண்மையிலே, ஊழல் வீட்டு கன்று குட்டிகள் தான் என்று கூறினார்.

0 comments: