Friday, December 25, 2015

On Friday, December 25, 2015 by Unknown in , ,    
இயேசு கிறிஸ்து இவ்வுலகில் அவதரித்த திருநாளான டிச.25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா மக்களுக்கும் விடுதலை நல்வாழ்வு அளித்த இயேசு கிறிஸ்து பிறந்த தினம் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள சின்னகோவில், பனிமயமாதா கோவில், அந்தோணியார் ஆலயம்,  தூய ததேயு ஆலயம், தூய ஜோசப் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடந்தது.

தூத்துக்குடி சின்னகோவில் நடைபெற்ற ஆராதனையில் ஆயர் இவோன் அம்புரோஸ் கலந்து கொண்டு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி அளித்தார். மாவட்ட முதன்மை குரு ஆன்ட்ரூ மற்றும் பங்குத் தந்தையர்கள் கலந்து கொண்டனர். பனிமயமாதா கோவிலில் பங்குத் தந்தை லெனின் டீரோஸ் தலைமையில் நடந்தது. புனித அந்தோணியார் கோவிலில் நடைபெற்ற ஆராதனையில் பங்குத் தந்தை ஸ்டார்வின் கலந்து கொண்டு நற்செய்தி அளித்தனர். நள்ளிரவு நடந்த இயேசு கிறிஸ்து பிறந்த நற்செய்தி திருப்பலியில் கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

நள்ளிரவு முதல் தொடர்ந்து அதிகாலை வரை தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர், நற்செய்தி திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.  சிறப்பு நற்செய்தி திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். சிறுவர்-சிறுமியர்கள் பட்டாசு வெடித்தும், புத்தாடை அணிந்தும் ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். 

0 comments: