Friday, December 04, 2015

On Friday, December 04, 2015 by Unknown in , ,    



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணப்பணிகள் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் கால்வாய்கள், ஒடைகள், அடைப்புகளை சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் வீரநாயக்கன்தட்டு மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி தொடக்கப்பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்  மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார்,ஆகியோர் நேரில் சந்தித்து உணவு வழங்கி ஆறுதல் கூறினார்.
 பின்னர் கோரம்பள்ளம் மற்றும் காலங்கரை கிராமம் குளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கப்படும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக முடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு  உத்தரவிட்டார்.
இந்நிகழ்வுகளின் போது மாண்புமிகு மேயர் அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகையா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவர் ராஜநாளா, உடன்குடி பேரூராட்சித்தலைவர் ஆயிஸா உம்மாள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் .தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: