Sunday, December 13, 2015

On Sunday, December 13, 2015 by Unknown in , ,    

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான அணைகள், குளங்கள் நிரம்பிவிட்ட நிலையில், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்றும், நாளையும் (13, 14–ந் தேதிகளில்) கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்து உள்ளது. 

எனவே தாமிரபரணி கரையோர பகுதிகள் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, மீண்டும் வெள்ள அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை மீட்பதற்கு வசதியாக மீன்வளத்துறை மூலம் 10 நாட்டுப்படகுகள் தயார் நிலையில் லாரிகளில் ஏற்றி வைக்கப்பட்டு உள்ளன. அந்த படகுகளில் சென்று மீட்பதற்கு வசதியாக 40 மீனவர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முதன்முறையாக தற்போது, மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நெல்லை, தூத்துக்குடிக்கு வந்து இருக்கிறார்கள். இக்குழுவினர் ரப்பர் படகுகள்,ஜெனரேட்டர்,பெரிய மரங்களை அறுக்கப்பயன்படும் வாள்கள், லைப் ஜாக்கெட்டுகள்,துடுப்பு படகுகள், எலக்ட்ரிக் வயர்கள், மோட்டார் என்ஜின்கள் உள்ளிட்ட ஏராளமான உபகரணங்களுடன் வந்துள்ளனர். வெள்ளம் ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும் வகையில் தயார் நிலையில் உள்ளனா.; 280 பேர் கொண்ட இக்குழுவினர் தூத்துக்குடி, திருவைகுண்டம் மற்றும் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

0 comments: