Friday, January 08, 2016

On Friday, January 08, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இனாம் மணியாச்சி ஊராட்சியில் 7.1.2016 நடைபெற்ற விழாவில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தளின்படி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் விழா 07.01.2016 நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பேசியதாவது:
உலகத் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் திருவிழா தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் திருநாளான அறுவடைத் திருநாள் உழவருக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும். இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும், உழவருக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி நவில்கின்ற நாள் பொங்கல் திருநாள். பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாளாக உள்ளதால், தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாமகளில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு மற்றும் ரூ.100 ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்கள். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்பந்த நியாய விலைக் கடைகள் மூலம் அனைவருக்கும் வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 4,45,039 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,431 காவல் குடும்ப அட்டைதாரர்களுக்கும், முகாம்களில் தங்கியுள்ள 469 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.கடம்பூர்.செ.ராஜீஇ கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.பேச்சியம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன், துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திருமதி.சிவகாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செழியன், கோ.மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் திரு.க.ஈஸ்வர பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




0 comments: