Friday, January 08, 2016

On Friday, January 08, 2016 by Unknown in , ,    
தூத்துகுடியில் தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக கணவன்– மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தூத்துக்குடி பெருமாள் நகரை சேர்ந்தவர் ராஜமன்னார் (65). இவருடைய மனைவி உஷா. இவர்கள் தூத்துக்குடி குமாரபுரம் பகுதியில் மர நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தை நடத்துவதற்காக ராஜமன்னார் தனியார் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முந்பு ராஜமன்னார் தனது நிறுவனத்தை குத்தகைக்கு விடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இதைக்கண்ட தூத்துக்குடி மாவட்ட மாப்பிள்ளையூரணி டேவீஸ்புரம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் பூபதி ராஜன் (35) என்பவர் ராஜமன்னார் நிறுவனத்தை நடத்த விரும்பினார். இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பூபதி ராஜன் ரூ.10 லட்சத்தை ராஜமன்னாரிடம் கொடுத்து உள்ளார். பின்னர் பூபதி ராஜன் தொடர்ந்து நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜமன்னார் முறையாக கடனை திருப்பி செலுத்தவில்லை எனவே நிறுவனத்தை காலி செய்யுமாறு பூபதிராஜனிடம் வங்கி அதிகாரிகள் கூறினார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதிராஜன் ராஜமன்னாரிடம் தான் கொடுத்த ரூ.10 லட்சத்தை திருப்பி கேட்டார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து பூபதி ராஜன் தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி மனுவை விசாரித்து வழக்குப்பதிவு செய்ய தாளமுத்து நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தாளமுத்து நகர் விசாரித்து, பூபதி ராஜனிடம் மோசடியில் ஈடுபட்டதாக ராஜமன்னார், அவருடைய மனைவி உஷா(58), மகன் முகுந்தன் (35), மகள் காயத்ரி(37) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

0 comments: