Tuesday, February 02, 2016

On Tuesday, February 02, 2016 by Unknown in , ,    
பஞ்சாயத்து தலைவியை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள சுந்தர்ராஜபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஹரீஸ் ரவி (35). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பால் என்பவரது கினற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக பொது இடத்தில் வாய்க்கால் வெட்டினாராம். இதற்கு கடையனோடை ஊராட்சி மன்றத் தலைவர் ரோஸ் ஜெயக்கொடி (64) தடை விதித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த ஹரீஸ் ரவி, தனது ஆதரவாளர்களான அதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (29), ஜெயசீலன் (50), ஆகியோருடன் சேர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் புகுந்து ரோஸ் ஜெயக்கொடியை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினாராம். 

இதில் ரோஸ் ஜெயக்கொடி பலத்த காயம் அடைந்தார். அலுவலகத்திலிருந்த மேஜை உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக நாசரேத் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹரீஸ் ரவி உட்பட 3பேரையும் கைது செய்தனர். கடந்த 14.09.2012-ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புளோரா ஹரீஸ் ரவிக்கு 2 ஆண்டு சிறை, 2ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு இன்று கூறினார். சாட்சியம் இல்லாத காரணத்தினால் மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆஜரானார். 

0 comments: