Friday, February 19, 2016

On Friday, February 19, 2016 by Unknown in , ,    
நீக்கம் செய்யப்பட உள்ள வாக்காளர்களின் பெயர் இணையதளத்தில் வெளியிடப்படும். இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாக்காளர் பட்டியலை சரி செய்யும் விதமாக இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்ய கடந்த 15–ந் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு உள்ள வாக்காளர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டு வருகிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் கூட்டம் நடத்துவார்கள். இந்த கூட்டத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர் பட்டியல், வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு வழங்கப்படும். அந்த பட்டியலில் உள்ள பெயர்களை அவர்கள் சரிபார்ப்பார்கள்.

வாக்குச்சாவடி நிலை முகவர்களை இன்று (வெள்ளிக்கிழமை) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு அனுப்பி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை சந்தித்து, நீக்கம் செய்யப்பட உள்ளவர்களின் பட்டியலை சரிபார்த்திட, அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நீக்கம் செய்யப்பட உள்ள வாக்காளர்களின் பெயர்கள், வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும், www.thoothudi.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.

இந்த பட்டியல், வருகிற 22–ந்தேதி நடக்க உள்ள கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள், இந்த பட்டியலில் உள்ள நபர்களை நீக்கம் செய்வது தொடர்பாக கருத்து இருந்தால், அதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

0 comments: