Wednesday, February 10, 2016

On Wednesday, February 10, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் வாகனம் மோதி உயிரிழந்த பாதயாத்திரை பக்தர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி விஸ்வபுரத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு, இருக்கன்குடிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது எப்போதும் வென்றான் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார். 4பேர் படுகாயம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த விஸ்வபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ராம்குமார் (16) என்பவர் சிசிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

இதையடுத்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து, விபத்திற்கு காரணமானர்களை கைது செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் விஸ்வபுரத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 100பேர் பாளை ரோட்டில் விவிடி சிக்னல் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து வந்த மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ரேனிஸ் ஜேசுபாதம், தென்பாகம் இன்ஸ்பெக்டர் சுரேஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கபடும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக காலை 10.40 மணி முதல் 11.25 வரை தூத்துக்குடி நெல்லை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

0 comments: