Wednesday, February 10, 2016

On Wednesday, February 10, 2016 by Unknown in , ,    
மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை  விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே புளியம்பட்டி அருகே உள்ள உலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா (45). விவசாயி. இவரது மனைவி சரவணம்மாள் (40). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். முருகையா வேலைக்கு செல்லமால் ஊர் சுற்றித்திரிந்துள்ளார். சரவணம்மாள் சிங்காத்தாகுறிச்சியில் தனது தோட்டத்தில் வேலைபார்த்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இதனால் முருகையாவுக்கும் அவரது மனைவி சரவணம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்ப்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த 21.3.2014 அன்று, தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகையா கோடாரியால் மனைவியை வெட்டிக் கொலை செய்தார். இதுதொடர்பாக புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகைய்யாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஜெயராஜ், மனைவியை கொலைசெய்த முருகையாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏவிமுத்து ஆஜரானார். 

0 comments: