Monday, June 13, 2016

On Monday, June 13, 2016 by Tamilnewstv in    
திருச்சி 13.6.16               சபரிநாதன் 9443086297

திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் காதல் திருமணம் செய்த பெண் தனது கணவர் உயிருக்கு ஆபத்து என பெண்புகார்

திருச்சி காவல் துறை ஆணையரிடம் காதல் திருமணம் செய்த இளநிலை பொறியியல் பட்டம் படித்த பெண் சுவாதிகா தன்னை திருமணம் செய்த (அருண்பிரஷாத்) கணவருக்கும் அவரின் குடும்பாத்தாருக்கும் ஆபத்து என காதலர் பாதுகாப்பு இயக்கம் காரத்தே முத்துகுமார் வழக்கறிஞர் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது

அப்பொழுது காதலர் பாதுகாப்பு இயக்கம் காரத்தே முத்துகுமார் வழக்கறிஞர் கூறுகையில் சேலம் பொண்ணம்மாபேட்டையை சேர்ந்த முத்தியாலு மகன் அருண்பிரஷாத் இவர் வைசியா செட்டியார் இனத்;தை சேர்ந்தவர் பெண் கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் தகப்பனார் ரவியால் அருண்பிரஷாத் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது அதற்கு ஆதரவாக இருந்த காதலர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக நான் ஈடுபட்டுள்ளதால் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்று அதற்கும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்

பேட்டி ... காதலர் பாதுகாப்பு இயக்கம் காரத்தே முத்துகுமார் வழக்கறிஞர்

0 comments: