Monday, June 13, 2016

On Monday, June 13, 2016 by Tamilnewstv in    
திருச்சியில் உள்ள காவிரி பாலத்தை சீரமைக்க கோரி பாமகவினர் மாவட்ட ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிட்டனர் 
திருச்சியில் உள்ள காவிரி பாலம் சுமார் 1 கோடியே 75 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது.ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாலத்தில் விரிசல் விட்டு சேதமடைந்திருந்தது.இதனை சீரமைக்க கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமகவினர் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தனர்.இது வரை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் பாமகவை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேட்டி : ஸ்ரீதர் - மாநில பொது செயலாளர் ,பாமக 

0 comments: