Tuesday, July 19, 2016

On Tuesday, July 19, 2016 by Tamilnewstv in
திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விசாயிகள் சங்ககூட்டம் அண்ணாலை நகரில் நடைபெற்றது அதில் 21.7.16 தங்களது கோரிக்கைகளை ஏற்காத தமிழக அரசை கண்டித்து சென்னையில் கழுத்து அறுத்துக்கொள்வதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு கூறுகையில் தமிழக முதல்வரை எங்களது குறையை தீர்க்க எத்தனையோ முறை சந்தித்தும் நேரடியாக சந்திக்காமல் அரசு அதிகாரியான தலைமை செயலரை சந்திக்கவைத்தனர் நாங்கள் கொடுத்த மனு ஆந்திரா தடுப்பனை பிரச்சனை முல்லைப்பெரியார் பிரச்சனை தடுப்பனை கட்ட கூடாது என்பதையும் விவசாயிகள் கடனை தள்ளுபடி என்பதனையெல்லாம் அரசும் முதல்வரும் செவிசாய்யகமல் உள்ளனர் அவர்கள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 21.7.16 100 பேர் சென்னை சென்று தலைமை செயலகர் முன்பு அவரை எங்கள் கழுத்தை அறுக்க சொல்லியும் இல்லை யென்றால் நாங்களே எங்கள் கழுத்தை அறுத்துகொள்வோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது மாநில தலைவர் அய்யகண்ணு சட்ட அலோசகர் முத்துகிருஷ்ணன் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.


பேட்டி   அய்யகண்ணு