Wednesday, August 31, 2016

On Wednesday, August 31, 2016 by Unknown in ,
கொல்கத்தா:

டாட்டா கார் தொழிற்சாலைக்காக சிங்கூரில் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய 1000 ஏக்கர் நிலத்தை 3 மாதங்களுக்குள் விவசாயிகளிடமே ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 'சிங்கூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்தத் தீர்ப்பிற்காக கடந்த பத்து வருடங்களாக நாங்கள் காத்திருந்தோம்.
நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து 26 நாட்கள் வரை நான் உண்ணாவிரதம் இருந்தேன். விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம்.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சிங்கூரில் டாட்டா தொழிற்சாலைக்காக விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலம் அவர்களிடமே திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் இந்த வெற்றி வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். சிங்கூர் விவசாயிகளின் நிலத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய ஒரு வேலை மட்டும் இதுநாள்வரை எனக்கு மிச்சமிருந்தது. தற்போது அதுவும் நிறைவேறி விட்டதால் இனி நான் நிம்மதியாக இறப்பேன்' என்று உருக்கமாகத் தெரிவித்தார்.