Tuesday, September 20, 2016

On Tuesday, September 20, 2016 by Tamilnewstv in


திருச்சி 20.9.16                  சபரிநாதன் 9443086297
திருச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் ஒருங்கிணைந்து மனு
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்; செயலாளர் உதுமான் அலி கூறுகையில் திருச்சி மாநகராட்சிக்கு தென்னூர் பகுதியில் அமைந்துள்ள தென்னூர் ஹைரோடு பள்ளி வாசலுக்கு சொந்தமான மந்தை பகுதியில் வருடா வருடம் மதநல்லிக்கத்தின் அடிப்படையில் நான்கு நாட்கள் உக்கிரமாகாளியம்மன் திருவிழா நடத்திக்கொள்ள பள்ளிவாசல் அனுமதி அளித்து வருகிறது. அந்த நான்கு நாட்கள் நடைபெறும் நிகழ்வில் எங்களுக்கோ எங்கள் பகுதி மக்களுக்கோ எவ்விதமான ஆட்சியேபனை கிடையாது. அப்படி  இருக்கையில் இன்று தனிப்பட்ட சிலர் அவர்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் அவர்களின் அரசியல் நகர்வுக்காகவும் திட்டமிட்டு இரு சமூகத்திற்கும் இடையே மதமோதலை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதற்காவே கடந்த எக்காலங்களிலும் நடைமுறை களில் இல்லாத ஒரு புதுவிதமான நிகழ்வை அந்த இடத்தில் நடத்த முயற்சிக்கின்றனர் அப்படி முயற்சிக்கும் நபர்கள் நடவடிக்கை எடுத்து போர்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை வழியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திக்க வந்தோம் ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் இல்லாததால் நாங்கள் அனைவரும் இங்கேயே நடவடிக்கை எடுக்கும் வரை தங்க உள்ளோம் என்று தெரிவி;த்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு தொளஹித்ஜமாதே பாபுலர் பிரண்ட் ஆப்இந்தியா sdbi போன்ற அனைத்து அமைப்புகளும் கலந்து கொண்டனர்.
பேட்டி மாவட்ட செயலாளர் உதுமான் அலி