Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Unknown in    

காவேரி நீர் பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கால சூழ்நிலை கடந்து விட்டதாகவும், கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலையில், உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு அமைத்து இரு மாநிலங்களுக்கும் அனுப்பி தண்ணீர் தேவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கர்நாடக மேலவையின் எதிர்க்கட்சி தலைவரும், பாஜக வின் முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஈஸ்வரப்பா, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்ப்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கர்நாடக மக்களுக்கு கடும் மன வேதனை அளித்துள்ளதாகவும், தமிழகத்தின் தண்ணீர் தேவை அடுத்த சம்பா சாகுபடிக்கு மட்டும் தான், ஆனால் கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு அமைத்து இரு மாநிலங்களுக்கும் அனுப்பி தண்ணீர் தேவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் காவேரி நீர் பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கால சூழ்நிலை கடந்து விட்டதாகவும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இன்று மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

0 comments: