Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Tamilnewstv in


திருச்சி 8.9.16                  சபரிநாதன் 9443086297
திருச்சியில் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சிசார்பி;ல் முற்றுகை போரட்டம் நடைபெற்றது
நாம் தமிழர் மாவட்ட செயலாளர் பிரபு வழக்கறிஞர் கூறுகையில் கர்நாடகாவில் நடக்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக கர்நாடகஅரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்( காவிரி நதி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதற்கு பா.. மற்றும் கர்நாடக காங்கிரஸ் கட்சிகள் துணை போகிறது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சிறிய அமைப்புகளை தூண்டி விட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர்மத்திய அரசு தனது பொறுப்பை தொடர்ந்து தட்டிக்களிக்கிறது. அது தனது பொறுப்பை உணர்ந்து நடுநிலையோடு செயல்பட வேண்டும்) தமிழக அரசும் மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை உச்சநீதி மன்றம் குழு அமைத்து முறையாக கர்நாடகாவிலிருந்து தண்ணீர் வர வழி செய்ய வேண்டும் தற்போது வரும் தண்ணீர் குடிப்பதற்கே பற்றாக்குறையாக இருக்கும் தண்ணீர் விவசாயத்திற்கு போதாது என்று கூறினார். பின்னர் தில்லை நகர் 7வது கிராஸில் உள்ள கர்நாடக வங்கியை முற்றுகையிட முயன்ற50க்கும் மேற்பட்ட நாம் தமிழர்கட்சியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றிச்சென்றனர். வங்கிக்கும் பொது மக்களுக்கும் எந்த வித சேதமும் வன்முறை நடைபெறாமல் தடுக்க காவல் துறையினரால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது இந்நிகழ்ச்சி திருச்சி தில்லை நகர் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது
பேட்டி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு