Saturday, September 24, 2016

On Saturday, September 24, 2016 by Unknown in    

கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி:

காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதனை செயல்படுத்த மறுத்துவிட்டது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. கர்நாடக அரசின் இத்தகைய அணுகுமுறை குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

காவிர் நீரை திறக்க மறுத்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பிடிவாதமான நிலைப்பாடு. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவை என்பதை ஏற்க மறுத்துள்ளது. 

காரைக்கால் பிராந்தியத்தில் சம்பா நெற்பயிர்களுக்கு காவிரி நீர் முக்கியமாக தேவை. தண்ணீர் கிடைக்காவிட்டால் விவசாயிகள் துயரமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

எனவே, கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பினை மீறுவது நீதித்துறைக்கும், சட்டமன்றத்துக்குமிடையே மோதலை மட்டுமே உருவாக்கும். மேலும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பினை அம்மாநிலஅரசு உறுதிசெய்ய வேண்டும்

0 comments: