Saturday, September 24, 2016

On Saturday, September 24, 2016 by Unknown in    

தேனி: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேனியில் வாக்காளர்களுக்கு பணம், சேலைகளை வழங்கும் பணியில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர். தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் பணியில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. தேனி நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் நாராயணபிரபு விருப்ப மனு கொடுத்துள்ளார். கடந்த 2006, 2011 ஆகிய தேர்தல்களில், இந்த வார்டில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பில், இப்போதே ‘வேலையை’ தொடங்கி விட்டார் நாராயணபிரபு.

தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டி அக். 2ம் தேதி கற்பக விநாயகர், முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சகஸ்ர கலச அபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேக பூஜை நடத்த உள்ளார். இதில் கலந்துகொள்ளுமாறு, பெரிய சைஸ் தாம்பூல தட்டில் தாலி, மஞ்சள் கயிறு, சேலை மற்றும் பழங்கள் சகிதத்துடன் பணமும் வைத்து வீடு, வீடாக வழங்கி வருகிறார். தேர்தல் தேதி அறிவித்த பிறகு, வெளிப்படையாக இதுபோன்று பணம், பொருள் கொடுக்க முடியாது என்பதால், இப்போதே அதிமுகவினர் களம் இறங்கியிருப்பது வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: