Sunday, November 06, 2016

On Sunday, November 06, 2016 by Tamilnewstv in    
திருச்சி 5.11.16
திருச்சி விடுதலை சிறுத்தை கட்சியின் அரசு ஊழியர் அய்க்கியப்பேரவைதிருவெறும்பூர் வட்டம் கிளை துவக்க விழா நிகழ்ச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஹாலில் பேரவை மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது
மாவட்ட செயலாளர் அண்ணாதுரை பேசிய போது அரசு ஊழியர் அய்க்கியப்பேரவை மத்திய மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனம் அரசு ஊழியர்களை ஒருங்கிணைத்து பேரவை காப்பாளர் அறிவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படி அரசு ஊழியர்;களை துறைச்சார்ந்த தமது நலன்களை மட்டும் சார்ந்து நில்லாமல் இம்மண்ணின் மைந்தர்களை மானமுள்ள தலைவர்களாக தலைநிமிர செய்வதன் மூலமே அடுத்த தலைமுறைகளை புரட்சி போர்ப்படையை தட்டி எழுப்பும் களமாக இப்பேரவையை நாம் கையாண்டு வருகிறோம் அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி வரலாற்றுச்சிறப்பு மிக்க சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்கின்ற கருத்தரங்கை பேரவை காப்பாளர் அவர்களின் தலைமையில் நடத்தி அதில் வரலாற்று சிறப்பு மிக்க அரசு ஊழியர்கள் மற்றும் சமூகம் நலன் சார்ந்த தீர்மானங்களை நிறைவேற்றியது பேரவை பயணத்தில் ஒரு மைல்கல் நாம் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோளாக வைக்கின்றேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேரவை மாநில பொதுச்செயலாளர் பாவணன் பேரவை மாநிலத் தலைவர் மலைச்சாமி ஆகியோர்; சிறப்புறையாற்றினர். திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழாதன் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன் திலீபன் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

0 comments: