Friday, February 17, 2017

On Friday, February 17, 2017 by Tamilnewstv in    
திருச்சி , 17

டிஜிட்டல் எம்பவர்மெண்ட் ஃபவுண்டேஷனுடனான கூட்டாண்மையோடு, எம்பேஸ் கிராமப்புற வெகுஜன மக்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை திறனளிக்கவுள்ளது
முசிறியைச் (திருச்சி) சேர்ந்த நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு எம்பேஸ் திறனளிக்கிறது. இதில் புதிய தலைமுறை வடிவமைப்பு தொழில்நுட்பங்கள், தகவல் மாறுபாடுகள் குறைப்பு, தொழில்முனைவு மேம்பாடு மற்றும் சந்தை இணைப்புகளை அமைத்தல் போன்றவைகளுக்கான பயிற்சிகளும் உள்ளடங்கும்.

ஒட்டுமொத்த சமூகத்திற்கும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு டிஜிட்டல் கல்வி திறன்களை வழங்குவதன் வழியாக, அவர்களது நீண்டகால சமூக பொருளாதார சாத்தியங்களை எம்பேஸ் மேலும் ஏதுவாக்குகிறது.
தனது பிராண்ட் உறுதிப்பாடானஅன்லீஷிங் தி நெக்ஸ்ட்”- க்கு உண்மையாகத் திகழும் வகையில், முன்னணி தகவல் தொழில் நுட்ப சேவைகள் மற்றும் தீர்வுகள் வழங்குனரான எம்பேஸ் தமிழ்நாட்டின், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முசிறி டவுனிலுள்ள கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வினை மாற்றியமைக்கும் வகையிலானதொரு தனித்துவமிக்க முன்முயற்சியின் அறிமுகத்தினை அறிவித்துள்ளது. டிஜிட்டல் எம்பவர்மெண்ட் பவுண்டேஷன்  உடனான கூட்டாண்மையோடு, எம்பேஸ் பாரம்பரிய திறன்-அடிப்படையிலான முசிறி பிராந்தியப் திறனாளிகளை ஒரு ஒருங்கிணைந்த, டிஜிட்டல் ரீதியில் ஏதுவாக்கப்பட்ட நெசவார்கள், கைவினைஞர்கள் மற்றும் தொழில்முனைவோராக பயிற்சியளித்து, அவர்களது சமூக-பொருளாதார வளத்திற்கு உதவுகிறது.
திருச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வில், இந்திய அரசின், ஜவுளிகள் அமைச்சகத்தின், தென் மண்டல - இயக்குனர் விசேஷ் நௌடியால் மற்றும் தமிழக அரசின், கைத்தறிகள் மற்றும் ஜவுளிகள் துறையின், துணை இயக்குனர் வாசு ஆகியோர் நடராஜநகர், மனமேடு, மங்களம்புதூர், பைத்தம்பாரை மற்றும் தாத்தையங்கார்பேட்டை ஆகிய முசிறியிலுள்ள ஐந்து டிஜிட்டல் ரீதியில் இணைக்கப்பட்ட கிளஸ்டர் ரீசோர்ஸ் மையங்களை மெய்நிகர் முறையில் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில், டிஜிட்டல் எம்பவர்மெண்ட் அறக்கட்டளையின் இயக்குனர் ஒசாமா மன்ஜார் அவர்களும் பங்கேற்றார். அமைவிட வசதி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சமூகத்தினரின் மேம்பாட்டிற்குத் தேவையான பல்வேறு சாதனங்கள் ஆகியவைகளை வழங்கும் நோக்கில், கிளஸ்டர் ரீசோர்சஸ் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில், ஒருகிளஸ்டர் வயர்லெஸ் நெட்வொர்க்உருவாக்கமும் உட்பட்டுள்ளது. இது கிளஸ்டர் சமூகத்திற்கு பெரிதும் தேவைப்படும் இணைய உள்கட்டமைப்பினை அளிக்கிறது. இப்பிராந்தியத்திலுள்ள பள்ளிகள், ஆரோக்கிய மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களை இணைப்பதன் வழியாக இந்த கிளஸ்டர் வயர்லெஸ் வலையமைப்பு வடிவாக்கம் ஒரு சூழலமைப்பினை உருவாக்கும். இக்குடிமக்களின் பணிபெறும் திறன், வாழ்வாதாரம் வருவாய் மற்றும் வாழ்க்கை சூழல்களை மேம்படுத்தும் நோக்கில், இம்முன்முயற்சி ஒருகிளஸ்டர் கோர் ஸ்கில்ஸ் மேம்பாட்டுதிட்டத்தினைகிளஸ்டர் டெர்ஷியரி ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட்உடன் அமல்படுத்தி, கிளஸ்டர் உறுப்பினர்களின் தொழில்முனைவு மற்றும் சுய-சார்பு தன்மையை ஊக்குவிக்கும்.
அதே போல்,“கிளஸ்டர் எண்டர்பிரைஸ் டெவலப்மெண்ட்திட்டம் டிஜிட்டல் ரீசோர்ஸ் மையம் மேம்பாட்டிற்கான மென்பொருள் ஆதரவை வழங்குவதன் வழியாக, டிஜிட்டல் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் செயல்படுத்துதலை ஏதுவாக்கும். கூடுதலாக,“கிளஸ்டர் ரிசோர்ஸ் மையம்தகவல்-அடிப்படையிலான டிஜிட்டல் மற்றும் நான்-ஐஊவு ஆதரவு சேவைகளை கிளஸ்டரின் கோர் மற்றும் டெர்ஷியரி செயல்பாடுகளுக்கு வழங்கும். இதுகுறித்து எம்பேஸ்ன் தலைமை நிதியியல் அலுரலர் சூர்யநாராயணன், டிஜிட்டல் ரீதியில் திறனளிப்பை டிஜிட்டல் எம்பவர்மெண்ட் அறக்கட்டளையின் இயக்குநர் ஓசாமா மன்ஜார் ஆகியோர் தெரிவித்தனர்.

0 comments: