Sunday, February 05, 2017

On Sunday, February 05, 2017 by Tamilnewstv in    
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த தலித் இளம் பெண் நந்தினி இந்து முன்னணியைச் சார்ந்த மணிகண்டன் என்பவரால் கடத்தி செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார், இதில் காவல்துறை நடவடிக்கை மெத்தனப்போக்காக இருப்பதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில் அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது,

மேலும் நந்தினியின் தாயார் ரா சக்கிளி கொடுத்த புகாரை மாற்றி எழுதி கையெழுத்து வாங்கக் கொண்டு புகாருக்கு உரிய நடவடிக்கை அலைகழித்து 15 நாட்கள் கழித்து பிணமாக மீட்டுக் கொடுத்துள்ளார்கள்
இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மேலும் குற்றவாளிகள் 4 பேரில் 2 பேருக்கு மட்டும் தற்பொழுது குண்டர் சட்டம் கொத்துள்ளார்கள்அதுவும் தோழமைக் கட்சிகள் இறங்கி போராடிய பின்னர் இந்த நடவடிக்கைமேலும் இந்து முன்னனியைச் சேர்ந்த மேலும் ஒரு குற்றவாளியான ராஜசேகரை கைது செய்ய வேண்டும்.
தமிழக அரசு நந்தினியின் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடுத் தொகையும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.
இந்த கொலை வழக்கில் அலட்சியம் காட்டிய போலீசார் மீது தாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் மாநில பொதுச் செயலாளர் துரை சந்திரசேகர், SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, தீண்டாமை ஒழிப்பு முன்னன் மாவட்ட பொருளாளர் சாமுவேல்ராஜ்' CPI (M) மாவட்ட செயற்குழு துரைசாமி, விடுதலை சிறுத்தை கட்சி பெரம்பலூர் | அரியலூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

0 comments: