Wednesday, July 26, 2017
On Wednesday, July 26, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி – 25.07.17
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை இன்று புறப்பட்டது.
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் எனப்படும் ரெங்கநாதரை நித்தமும் நினைத்து திருப்பாவை அருளிய ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் நாச்சியார் திருநட்சத்திரமான ஆடிமாதம் பூர நட்சரத்திரத்தின்போது அவதரித்தவர். பெருமாளுக்கான மாலையைத் தான் அணிவித்த பிறகே கொடுத்ததால் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று பக்தர்களால் போற்றப்படும் ஆண்டாள் ஸ்ரீரங்கத்திற்கு வந்து ரங்கநாதரின் திருவடிகளில் ஐக்கியமானார். இதனையடுத்து சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கநாதரின் சார்பில் வஸ்திர மரியாதை வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடைபெறும்.
அதன்படி இன்று மாலை ஆண்டாளுக்கு சமர்ப்பிப்பதற்கான பட்டுபுடவைகள், வஸ்திரங்கள், மங்களப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், பழங்கள் யாவும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த வஸ்திரங்கள் யாவும் நாளை மதியம் ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டு, நாளை மறுதினம் ஆடிப்பூரத்தின்;போது ஸ்ரீரங்கம் வஸ்திரமரியாதை கொண்டு அலங்கரிக்கப்பட்டு ஆண்டாள் காட்சியளிப்பார். வஸ்திரமரியாதை யாவும் ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன் தலைமையில் கோவில் நிர்வாகிகள் அனைவரும் இதனை எடுத்துச் சென்றனர். இந்த வைபவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி : திரு.சுந்தர்பட்டர் - ஸ்ரீரங்கம்கோவில்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி திராடவிடர் கழகம் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கடந்த 27.01.2018 அன்று ச...
-
பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் திண்டுகல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தலுக்கா கொண்டங்கி கீரனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவ...
-
கோவை அருகே உள்ளது ஒண்டிப்புதூர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்து நின்றனர். பஸ் நிறுத்தம் அருகே ஒரு வேன் மற்றும் 2 சக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், திருப்பூர் வாலிபாளையம், கே.பி.என்., காலணி, முள்ளுக்காடு பகுதிகளில் எம்.ஜி.ஆர் பிறந...
-
நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
0 comments:
Post a Comment