Wednesday, July 26, 2017

On Wednesday, July 26, 2017 by Tamilnewstv in    
திருச்சி            25.7.17

மின்வாரியம் கள உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பபட வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பாக திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு  மண்டல செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் ஆர்பாட்டம் நடைப்பெற்றனர்.

தமிழக அரசு  அவுட்சோர்ஸிங் முறை ரத்து செய்ய வேண்டும்கள உதவியாளர்களின் பயிற்சி காலத்தை ரத்து செய்ய வேண்டும் சம்பளம் குறைவாக கொடுப்பதற்காகவே பயிற்சியாளர் தேர்வு செய்கின்றனர். மற்றும் மின்வாரிய தொழிலாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கிடவும் என உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னர் மின்வாரியம் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.

மேலும், இந்த ஆர்பாட்டத்தில் மாநில செயலாளர் முத்துசாமி, து.தலைவர் கண்ணன், திருச்சி வட்ட பொருளாளர் ஈஸ்வரன், திருச்சி மண்டல அனைத்து வட்ட _ கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி: சுப்ரமணியன் - பொதுச் செயலாளர் (தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்)

0 comments: