Thursday, July 27, 2017

On Thursday, July 27, 2017 by Tamilnewstv in ,    
14 வது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்கும் விழாவினை முன்னிட்டு அரசன் சிண்டிகேட் அறக்கட்டளை சார்பாக திருச்சி பார்வை திறன் குறைபாடுடைய மகளிருக்கான மேல் நிலைப்பள்ளியில் இனிப்பு - காரம் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
அவ்விழாவின் போது அரசன் சிண்டிகேட் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மரு. பாஸ்கரன் பேசுகையில் புதிய குடியரசு தலைவரை பதவியேற்பதை வரவேற்கும் விதமாக திருச்சி புத்தூர் அருகே உள்ள பார்வை இழந்தோர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவியருக்கு இனிப்பு, காரம் வழங்கினர். அவர் ஏழை குடும்பத்தில் பிறந்து சுய உழைப்பால் குடியரசு தலைவராக வளர்ந்தவர். 
இவருடைய ஆட்சி காலத்தில் 2020-ல் இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல் கலாம் ஐயா கண்ட கனவு கண்டிப்பாக நிறைவேறும் என்று தெரிவித்தார்.
மேலும், அறக்கட்டளை தலைவர் பெரிய கோபால், செயலாளர் கோபி கண்ணன், பொருளாளர் செந்தில் இளமான் மற்றும் களப்பணியாளர்கள் மோகன், சரவணன், சேது கலந்து கொண்டனர்.

0 comments: