Thursday, July 27, 2017

On Thursday, July 27, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி   
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதிய தன்னம்பிக்கை சார்பாக திருச்சி கோர்ட், MGR சிலையிலிருந்து பேரணியாக மெழுகுவர்த்தி ஏந்தி மெளன ஊர்வலம் சென்றனர்.
புதிய தன்னம்பிக்கை சங்கம் செயலாளர் அருண் அமுல்ராஜ் தலைமையில் திருச்சி கோர்ட் MGR சிலையிலிருந்து - உழவர் சந்தை மெளன அஞ்சலி ஊர்வலம் நடைப்பெற்றது. 
அப்போது அவர் பேசுகையில் திருச்சியில் அப்துல் கலாம் அவர்களுக்கு சிலை அமைக்கவும், தெப்பகுளம் பகுதியிலுள்ள கல்லூரி சாலையை அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்து உள்ளோம். அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், தலைவர் முகுந்தன் பொருளாளர் சகாயராஜ் மகளிரணி தலைவி ஸ்டெல்லா இளைஞரணி பழனிச்சாமி மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: