Thursday, August 03, 2017

On Thursday, August 03, 2017 by Tamilnewstv in ,    
மாண்புமிகு. புரட்சித் தலைவர் டாக்டர்.எம் ஜி ஆர் அவர்களின் பொற்கரங்களால் தொடங்கிவைக்கப்பட்டு மாண்புமிகு டாக்டர். புரட்சித்தலைவி அம்மா  அவர்களால் அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டு இன்றுவரை விசுவாசத்துடன் ஆசிரியர் நலன்களை குறிக்கோளாக கொண்டு செயலாற்றி வரும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின்(அரசு அங்கீகார எண் : 149/96 )  மாநில பொதுக்குழு கூட்டம் 30-07-17 ஞாயிறு அன்று   திருச்சி   ஓட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு. புரட்சித்தலைவி அம்மா வழியில் திறம்பட செயலாற்றிவரும் தமிழக அரசு ஆசிரியர்களின் உண்மையான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து நிறைவேற்றும் என்ற முழு நம்பிக்கையுடன் அரசுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்து ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்றி மாண்புமிகு. தமிழக  முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு. பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களையும், கல்வித்துறை உயர் அலுவலர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி தர  வலியுறுத்தி கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது


தீர்மானங்கள்
————————
1.புதிய ஓய்வூதிய(c p s)திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய பென்சன் திட்டத்ததை தொடர உத்தரவிட வேண்டும்.

2.ஆசிரியர்களுக்கான எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமுல்படுத்தவேண்டும்  

3.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்து அதன்அடிப்படையில்ஊதியமாற்றம் செய்யப்படவேண்டும்

4.இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியான முன்னுரிமை பட்டியல் தயார் செய்து பதவிஉயர்வு மற்றும் ஊதியஉயர்வு பெற அரசாணை பிறப்பிக்க வேண்டும்



5.ஊதிய மாற்றம் அமுல்படுத்தப்படும் வரை  20 சதவீத ஊதியம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படவேண்டும் என  கல்வித்துறை உயர் அலுவலர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி தர  வலியுறுத்தி கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது

0 comments: