Wednesday, August 16, 2017

On Wednesday, August 16, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி     16 .8.17
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அனைத்துக்கட்சிகளின் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் கடன் தள்ளுபடிகோரியும், கரும்பு நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும், தமிழகத்தில் கடலூர், நாக்கை, திருவாரூர், தஞ்சை  மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திமுக தலைமையில்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக, இந்திய  கம்யூனிஸ்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய இந்திய முஸ்லிம் லீக், அகில இந்திய பார்வர்டு ப்ளாக்  அனைத்து தோழமை  கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். 
இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் மாநகரமாவட்ட செயலாளர் அருள் பேசுகையில்: ' தமிழகத்தில் கடலூர், தஞ்சை, புதுகை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை மத்திய அரசு பெட்ரோலியம் மண்டலமாக அறிவித்திருக்கிறது. 15 நாட்களுக்கு முன் தமிழக முதல்வரிடம்  விவசாய கடன் தள்ளுபடி பற்றி கோரிக்கை முன் வைத்தோம்.                                      

 தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் 50%மேல் போராட்டம் நடத்தியவர்களால் அடித்துநொறுக்கபட்டு விட்டது. மூடியும் ஆகிவிட்டது.எங்களிடம் தற்போது நிதி இல்லை என்கிறார்.கரும்பு நிலுவை தொகையையாவது ஆலைநிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்றுகேட்டால் ஆலைகள் நஷ்டத்தில்இயங்குகின்றன என்று சாவியைகொடுக்கிறார்கள். அவர்களிடம் நிலுவைதொகையை கொடுங்கள் என்று எப்படி கேட்கமுடியும் என்று முதலாளி களுக்கு ஆதரவாகபேசுகிறார்கள். மத்திய அரசோதமிழகத்தையே அழித்துவிட வேண்டும் என்றுசெயல்படுகிறது.  ஓ.என்.ஜி.சி, மீத்தேன்,கெய்ல் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைசெயல்படுத்துவதிலேயே தீவிரமாகஇருக்கிறது. விவசாய நிதியைவிவசாயிகளிடம் அளிக்காமல் தனியாரிடம்கொடுத்து விடுவதால் விவசாயியோபோராடிக்கொண்டிருக்கிறான். கடனை ரத்துசெய்ய கேட்டால் டாஸ்மாக் மூடியாகிவிட்டது.நிலுவை தொகையை கேட்டால் ஆலைமூடப்படுகிறது எஎன பதிலளிக்கின்றனர்.தாங்கள் செய்த ஊழலை மறைக்க மோடியிடம்அடிமை யாக கிடக்கிறார்கள். கர்நாடகாவில்31% தண்ணீர் இருக்கிறது. பிரதமரிடம்வலியுறுத்த சொன்னால், . காவிரி என்றுபேசவே பயப்படுகிறார்கள். 10000 கன அடி நீர்திறந்து விட்டதற்கு அங்கிருக்கும் பாஜக வினர்முதல்வரை கண்டித்து போராட்டத்தில்ஈடுபடுகின்றனர். அங்கிருக்கும் முதல்வர்அணை பாதுகாப்பிற்காகவே தண்ணீர் திறந்துவிட பட்டதாகவும், விவசாயிகளுக்குசொந்தமான ஒரு சொட்டு நீர் கூடதமிழகத்திற்கு திறந்து விடமாட்டேன் என்றுகூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் முதல்வர்இருப்பதாகவே தெரியவில்லை. ஹைட்ரோகார்பன், மீத்தேன் எரிவாயு, ஓ.என்.ஜி.சி யேவெளியேறு என்ற கோஷத்தை முன் வைத்துபாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலமாகஇருப்பதை பாதுகாக்கப்பட்ட பெட்ரோலியமண்டலமாக அறிவித்திருப்பதை கண்டித்துவருகிற 29 ம் தேதி தஞ்சாவூர், கடலூர்,நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்டமாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் விவசாயிகள் நடத்த உள்ளதாக தெரிவித்தார்       இந்த ஆர்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் கே.என் அருள், மாவட்ட துணை செயலாளர் புல்லட் லாரன்ஸ் மாவட்ட பொருளாளர் சந்தன மொழி வழக்கறிஞர் அணி திவாகரன் ஏர்ப்போர்ட் பகுதி பொருளாளர் மாரிமுத்து தில்லை நகர் பகுதி மற்றும் கிளை செயலர் ஆகியோர் திரளாக  பங்கேற்றனர்
பேட்டி : அருள் -விடுதலை சிறுத்தை கட்சி மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்
 முஸ்லிம் லீக் மாவட்ட செயலாலர் நிஜாம்

0 comments: