Wednesday, March 28, 2018
On Wednesday, March 28, 2018 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விமானம் மூலம் இன்று காலை திருச்சி வருகை தந்தார். கே.சாத்தனூர் அய்மான் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெறும் 15-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அவர்
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வுக்குப் பிறகு மாலை தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விமான நிலையத்தில் ஆளுநரை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசமணி, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர் கார் மூலம் புறப்பட்ட ஆளுநர் வயர்லஸ் சாலை, உடையான்பட்டி ரயில்வே கேட் வழியாக கே. சாத்தனூர் அய்மான் மகளிர் கல்லூரிக்கு சென்றிருக்கின்றார்.
முன்னதாக ஆளுநர் கார் செல்லும் பாதையான வயர்லஸ் சாலையில் நேற்று மாநகராட்சி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள், சாலையோர மரங்கள் சிலவும் அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த சாலையில் குப்பை மற்றும் கழிவு பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன.
வயர்லஸ் சாலையில் கடைகள் வைத்திருந்த பலரும், ஆளுநர் ரோட்டுல போவதற்காக ரோட்டிலிருந்து 10 அடி தூரத்தில் உள்ள கடைகளையும், மரங்களையும் அகற்றி எங்க வயித்துல அடிக்கிறாங்களே என புலம்பியவர்களால் இன்று ஆளுநர் பயணப்பாதையில் ஏதும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அய்மான் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்
மாணவிகள் உட்பட இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற 247 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
பேசுகையில்: பெண்கள் உலகளவில் அரசியல், பாதுகாப்புத்துறை, விளையாட்டு மற்றும் பிற துறைகளில் தங்களை ஈடுபடுத்தியிருப்பது பெருமைக்குரியதாய் இருக்கின்றது என எடுத்துரைத்தார்.
மேலும், இவ்விழாவில் நிர்வாகக் குழு தலைவர் ஜெய்லானி சம்சுதீன், துணை தலைவர் ஹசன் அஹமது, கல்லூரி தாளாளர் சாகுல் ஹமீது, கல்லூரி முதல்வர் சுபத்ரா, பேராசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வுக்குப் பிறகு மாலை தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விமான நிலையத்தில் ஆளுநரை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசமணி, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர் கார் மூலம் புறப்பட்ட ஆளுநர் வயர்லஸ் சாலை, உடையான்பட்டி ரயில்வே கேட் வழியாக கே. சாத்தனூர் அய்மான் மகளிர் கல்லூரிக்கு சென்றிருக்கின்றார்.
முன்னதாக ஆளுநர் கார் செல்லும் பாதையான வயர்லஸ் சாலையில் நேற்று மாநகராட்சி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள், சாலையோர மரங்கள் சிலவும் அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த சாலையில் குப்பை மற்றும் கழிவு பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன.
வயர்லஸ் சாலையில் கடைகள் வைத்திருந்த பலரும், ஆளுநர் ரோட்டுல போவதற்காக ரோட்டிலிருந்து 10 அடி தூரத்தில் உள்ள கடைகளையும், மரங்களையும் அகற்றி எங்க வயித்துல அடிக்கிறாங்களே என புலம்பியவர்களால் இன்று ஆளுநர் பயணப்பாதையில் ஏதும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அய்மான் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்
மாணவிகள் உட்பட இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற 247 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
பேசுகையில்: பெண்கள் உலகளவில் அரசியல், பாதுகாப்புத்துறை, விளையாட்டு மற்றும் பிற துறைகளில் தங்களை ஈடுபடுத்தியிருப்பது பெருமைக்குரியதாய் இருக்கின்றது என எடுத்துரைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
Thousands of Staff and students of NIT-T paid rich floral tributes to the former president of India, Dr. APJ Abdul Kalam at a program organ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment