Thursday, March 29, 2018
திருச்சி 29.03.18
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கடைசி நாள் இன்று . உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு இன்றோடு முடிவடைகிறது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது. கர்நாடக சட்டப் பேரவை தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது. இந்த நிலையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை.
தமிழக அரசு மத்திய அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் உண்மை நிலை என்ன என்று தெரியவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும்.
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி..
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் CBl மெத்தனம் காட்டுகிறது திருச்சி தெளகித் சுல்தானா வழக்கு சங்கர சுப்பு வழக்கறிஞர் மகன் கொலையில் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை என CBl மெத்தனப் போக்கை கண்டித்து பேட்டியளித்த எழுச்சித் தமிழர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்
ஆனால் அதுவும் கூட நமக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் வேறு எந்த ஒரு அமைப்பை உருவாக்கினாலும், அது நமக்கு உரிய நீரை பெற்றுத்தரக் கூடிய அமைப்பாக இருக்காது.
காவிரி நடுவர் மன்றம் அறிவித்த இறுதி தீர்ப்பில் சட்டப்படி Creates Scheme என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்பதை தெளிவு படுத்தி இருக்கிறது. இப்போது மத்திய அரசு அந்த Scheme என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்திலே மனு தாக்கல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் காலம் தாழ்த்துகிற சதி முயற்சி.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் காவிரி நீர் தமிழக மக்களுக்கு கிடைப்பதற்கு உத்திரவாதம் கிடைக்கும். இல்லை என்றால் எந்த உத்திரவாதமும் இல்லை.
காத்திருப்பதால் எந்த நீதியை அளிக்காது எனவே தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகு கடுமையான ஒரு அழுத்தத்தை கொடுக்க ஏதுவாக இருக்கும்.
நவநீத கிருஷ்ணன் தற்கொலை செய்யப் போவதாக சொல்வது சரியான நிலைபாடு அல்ல, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நாம் ஒரு முடிவை எடுக்க முடியாது. அல்லது இதுவும் ஒரு நாடகம் என்று மக்கள் கருத நேரிடும். அதை தவிர்த்து பதவி விலகுவது நேர்மையான, நியாமான அணுகு முறையாக இருக்கும். செய்யவும் முடியும்.
50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்கின்றார்கள் என்றால், மிகப் பெரிய அரசியலமைப்பு சட்ட நெருக்கடியாக அது மாறும். சர்வதேச அரசியலின் கவனத்தை அது ஈர்க்கும். ஒரு தீர்வு எட்டும். இதில் அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்க வேண்டும்.
தமிழகத்தை இன்னும் 10 அல்லது 25 ஆண்டுகளில் குடிநீருக்கு அலையும், தவிக்கும் ஒரு மாநிலமாக மாற்றுவர்கள். அதற்கான அடித்தளம் தான், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட், போன்ற பணிகள் எல்லாம்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரால் ஒட்டு மொத்த டெல்டா மாவட்டத்தையே அவர்கள் வேட்டையாட போகிறார்கள். புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த கடற்கரை பகுதியும், ஹைட்ரோ கார்பன் இருப்பதாக முடிவு செய்திருக்கிறார்கள். அதை பெட்ரோலியம் சோன் அல்லது கெமிக்கல் சோன் என்று அறிவிக்கப் போகிறார்கள். இதனால் தமிழக நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். அங்கிருந்து மக்கள் புலம்பெயர, இடம் பெயர வேண்டிய நெருக்கடி உருவாகும். இது மிகவும் ஆபத்தானது தமிழகத்தை திட்டமிட்டே பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறதோ என்ற கவலை இருக்கிறது.
31 ஆம் தேதி நியூட்ரினோ திட்டத்தை முற்றாக கைவிட வலியுறுத்தி வைகோ நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது ஆதரவும் அளிக்கிறது
கூட்டுறவு சங்க தேர்தல் எப்போதும் ஆளுங்கட்சி ஆதிக்கம் செய்யும் ஒரு தேர்தல், தலித்துக்களோ, பெண்களோ பங்கேற்க முடியாத, இட ஒதுக்கீடு இல்லாத தேர்தல், அதற்கு தேர்தல் என்று அறிவிக்காமல் ஆளுங்கட்சியை சார்ந்தவர்களையே நியமித்துவிட்டு போகலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment