Wednesday, April 25, 2018

On Wednesday, April 25, 2018 by Tamilnewstv in ,    
ஆசிஃபா படுகொலைக்கு நீதிகேட்டும், படுகொலையை கண்டித்தும் திருச்சியில் ஆர்ப்பாட்டம்


ஆசிஃபா படுகொலைக்கு நீதி கேட்டு, திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தின்போது துணை பொதுச்செயலாளர் தெளபிக் கலந்து கொண்டார்.


அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


காஷ்மீரில் ஆசிஃபா என்கிற 8 வயது சிறுமியை, சிலர் பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்துள்ளனர்.


நாடு முழுவதும் இச்சம்பவம், பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்தச் சம்பவத்தை கண்டித்தும், ஆசிஃபாவின் படுகொலைக்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி இராமகிருஷ்ணா பாலம் அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது.


ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு நடந்த இப்போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமியர்கள், பெண்கள் ஆசிஃபாவின் மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பப்பட்டது.


குற்றவாளிகளை சுட்டு கொல்ல வேண்டும் என

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: