Thursday, April 26, 2018

On Thursday, April 26, 2018 by Tamilnewstv in ,    

நிர்மாலா தேவி விசாரணை தொடர்பாக பெண் நீதிபதி தலமையிலான  சிறப்பு விசாரணை குழு  நியமிக்கப்பட வேண்டும் – திருச்சியில் திருமாவளவன் பேட்டி

தஞ்சையில் நடைபெறும் விழாவிற்கு கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த திருமாளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்

தமிழகத்திற்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சிகளுடன் நான்கு  கட்ட போரட்டங்களை பொதுமக்களுடன் வெற்றிகரமாக நடத்தி உள்ளோம் ஆனால் மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை. ஆகவே கவர்னரை சந்தித்து மனு கொடுத்து உள்ளோம்,

காவேரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றாக கண்காணிப்பு குழு அல்லது மேற்பார்வை குழு  இதில் எதாவது ஒன்று தான் மத்திய அரசு அமைக்கும் ஆனால் தொடர் போராட்டங்கள் மூலமாக சட்ட ரீதியாக பெற வேண்டிய உரிமையை பெறுவோம்.

நிர்மாலா தேவி தொடர்பாக இரு வேறு விசாரனண என்பது சட்டத்துக்கு புறம்பானது பெண் நீதி தலமையிலான சிறப்பு  புலணாய்வு அமைக்க வேண்டும் அதில் சரிபாதியாக பெண் உறுப்பினர் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.

காவேரி போரட்டங்களை பொய் வழக்குகள் மூலம் தமிழக அரசு நசுக்க முயற்ச்சிக்கிறது,

மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் என்றும் கூறினார்.

0 comments: