Tuesday, September 18, 2018

On Tuesday, September 18, 2018 by Tamilnewstv in ,    
திமுக சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


வைக்கிற இடத்தில் பணத்தை வைத்து விட்டார். கொள்ளையடித்த பணத்தை மடியில் கட்டிக் கொண்டா அலைகிறார். அதனால்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் மடியில் கனமில்லை வழியில்; பயமில்லை என சொல்கிறார் – திருச்சியில் கே.என்.நேரு பேச்சு.


அ.தி.மு.க ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துகிடக்கிறது. பருப்பு மற்றும் முட்டை கொள்முதல், நெடுஞ்சாலைத்துறை டெண்டர், பொதுப்பணித்துறை மற்றும் நீர்நிலைகள் குடிமராமத்து செய்தல் என அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும்

குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்மீது, சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய வேண்டும்.மேலும், குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கரை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 தமிழக காவல்துறை தி.மு.க-வினர் மீது மட்டும் பொய் வழக்குப் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்களே தவிர, அ.தி.மு.க-வினர் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது.

தேர்தலின்போது, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தற்காக என் மீதும் என் கட்சிக்காரர்கள் மீதும் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி வழக்குப்பதிவு செய்தார்கள் திருச்சி மாநகர காவல்துறையினர். அந்த வழக்கில் இருந்து நாம் தவறு செய்யவில்லை என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்து விடுதலை ஆகியுள்ளோம் என்றும் அண்ணா பிறந்தநாள் அன்று, நமக்கு ஒதுக்கிய நேரத்தில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கக் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், அ.தி.மு.க மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக வந்து மாலை அணிவித்தார்கள். ஆனால், போலீஸார் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சியினர்மீது சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மீண்டும் சொல்கிறேன், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தவறுசெய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 பி.ஜே.பி-யுடன் தி.மு.க ரகசியக் கூட்டணி வைத்திருப்பதாக மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவர், தி.மு.க-வுக்கு உள்ள சிறுபான்மை மக்களின் ஆதரவைக் கெடுப்பதற்காகவே இப்படிப் பேசிவருகிறார். தி.மு.க எப்போதும் சிறுபான்மையினர் பாதுகாவலனாக இருக்கும். ஒருபோதும் சிறுபான்மை மக்களை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

தம்பிதுரை, மத்திய அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் பி.ஜே.பி-யைப் பழிவாங்குவதற்காக இப்படிப் பேசிவருகிறார். அவர், பலமுறை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, விமானம் மற்றும் விமான நிலையங்களில் சந்தித்துள்ளார். இதனால், தி.மு.க-வுக்கும் தம்பிதுரைக்கும் தொடர்பு உள்ளது என்று கூற முடியுமா? என்றும்

 பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச் ராஜா, தொடர்ந்து வரம்பு மீறிப் பேசிவருகிறார். அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார் மேலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார் மற்றும் திமுக தொண்டர்கள்
 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

0 comments: