Wednesday, September 19, 2018

On Wednesday, September 19, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி – 18.09.18


திருச்சி பூம்புகார் விற்பனைமையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது – ஏராளமானோர் பார்வையிட்டு வாங்கிச்செல்கின்றனர்.
முக்கொம்பு மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்படும் - ஆட்சியர் பேட்டி.

தமிழகத்திலுள்ள கைவினைக் கலைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பூம்பூகார் விற்பனைநிலையம் செயல்பட்டுவருகிறது. இதனிடையே தமிழக மக்களால் இல்லங்களில் நட்பை வளர்க்கும் விதமாகவும், சந்தோஷத்தை வெளிப்படுத்தும்விதமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் இன்று முதல் அக்டோபர் 20ம்தேதிவரை நடைபெறும் நவராத்திரி 'கொலுபொம்மைகள்' கண்காட்சி தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக பலவித கொலுபொம்மைகள், ராமாயண கதையை விளக்கும் பொம்மைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், கடவுள்கள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகிதக்கூழ், மண், பலிங்கு, மாக்கல், நவரத்தினகற்கள், மெழுகு, சந்தனமரம், நூக்கமரம் போன்ற பொருட்களால் ஆன பொம்மைகள், புதிய வரவுகள் என ரூ.50முதல் 25ஆயிரம் வரை இடம்பெற்றுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை ஏராளமானோர் பார்வையிட்டு பொருட்களை வாங்கிச்சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஆட்சியர் அளித்த பேட்டியில் முக்கொம்பு கொள்ளிடம் கதவணை சேதமடைந்து தற்காலிக பராமரிப்பு பணிகள் முழுஅளவில் முடிக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதுடன், 20ஆயிரத்து 152கனஅடி தண்ணீர் வரப்பட்டுள்ளது, கொள்ளிடத்தில் 700கனஅடி தண்ணீர் வெளியாகிறது. அதேபோன்று வாய்க்கால்பாசனத்திற்காக 500கனஅடிதண்ணீர் திறக்கப்படுவதுடன், நாளைமுதல் 200கனஅடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்படவுள்ளது. சம்பாசாகுடிக்கான தண்ணீர் உரியமுறையில் செல்ல பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. தண்ணீரை முழுவதும் நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. வடகிழக்குபருவமழைக்கு முன்னதாக கொள்ளிடத்தில் பாதுகாப்பானமுறையில் கண்காணிக்கவும், உரியமுறையில் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 410கோடி ரூபாய்க்கு கட்டப்படும் கதவணையின் பூர்வாங்கப்பணிகளுக்கான அறிக்கை தயாரிக்க ஆய்வுசெய்து தயரிக்கப்பட்டுவருவதுடன், அப்பணிகளும் விரைவில் முடிவடைந்து பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர்வரத்து அதிகரித்து இருந்தாலேயே முக்கொம்பு கொள்ளிடம் உடைப்பு சரிசெய்யும் பணிகள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், உடைப்பால் விவசாயத்திற்கும், தண்ணீர் விவசாயத்திற்கு செல்வதற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென ஆட்சியர் தெரிவித்தார். அதேநேரம் மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பேட்டி : 1)திரு.கு.ராஜாமணி – மாவட்ட ஆட்சியர்

0 comments: