Monday, February 17, 2020

On Monday, February 17, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி  17.02.2020

திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் மக்கள் பணி விரைவாக செய்திட வழிவகை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
                                                                              திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சியை சேர்ந்த கிராம ஊராட்சி தலைவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தனர். கூட்டம் அரங்கில் அமர வைக்கப்பட்ட அவர்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சந்தித்தார்.
அப்போது கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டாக அவரிடம் மனு அளித்தனர்.

 ஊராட்சி தலைவர்களுக்கு காசோலையில் கையொப்பம் இடும் அதிகாரம் பறிக்கப்பட்டு கணினி முறையில் பணம் பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, சாலை அமைத்தல், தெருவிளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்ட பணிகள் செய்யும்போது தாமதம் ஏற்படுகிறது.

எனவே பழைய முறைப்படி ஊராட்சி தலைவர்களுக்கு காசோலையை கையாளும் அதிகாரத்தை தரக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு, செய்தியாளர்களிடம் கூறும்போது....... ஆன்லைன் பரிவர்த்தனை முறையானது மத்திய அரசு கொண்டு வந்த திட்டமாகும். எனவே அதனை மாற்ற இயலாது. அதேசமயம் ஆன்லைன் பரிவர்த்தனையில் சில இடங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கிராம ஊராட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அது விரைவில் சரி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் இது குறித்து திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த தர்மன் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது....... ஆன்லைன் பண பரிவர்த்தனையால் பல பணிகள் முடக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் பணியை விரைவாக செய்ய பழைய முறைப்படி காசோலையில் கிராம ஊராட்சி தலைவர்கள் கையொப்பமிடும் அதிகாரத்தை வழங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகம் விரைவாக கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் விரைவில் நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

0 comments: